இந்து என்ற மதம்... இன்று இந்து என்ற பிரச்சனையாக மாறிவிட்டது... - நடிகர் பார்த்திபனின் டுவிட்டால் வெடித்தது சர்ச்சை...!
‘பொன்னியின் செல்வன்’ படம்
தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனராக விளங்கும் மணிரத்னம், தனது கனவு படமான பொன்னியின் செல்வனை வெற்றிகரமாக இயக்கி முடித்துள்ளார்.
இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயராம், பாலாஜி சக்திவேல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 30ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்போடு திரையரங்கில் வெளியானது.
தற்போது இப்படம் மக்களின் பேராதரவுடன் மாபெரும் வசூலை அள்ளி வெற்றிப்படைத்துள்ளது. உலகம் முழுவதும் 'பொன்னியின் செல்வன்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது.
மாபெரும் சாதனைப் படைத்த ‘பொன்னியின் செல்வன்’
'பொன்னியின் செல்வன்' படம் உலகம் முழுவதும் ரூ. 400 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமான லைகா நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இன்னமும் மவுசு குறையவில்லை. ஆதனால், இன்னும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இதனால் படக்குழுவினர் பெரு மகிழ்ச்சியில் திகைத்துள்ளனர்.
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் சின்ன பழுவேட்டையராக பார்த்திபன் நடித்துள்ளார்.
நடிகர் பார்த்திபனின் சர்ச்சை டுவிட்
இந்நிலையில், நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், Crosses-400 Crores!!!! இந்து என்ற மதம்.. இன்று இந்து என்ற பிரச்சினையாக மதம்மாறி விட்டது...! இந்த எழுத்தும் ஏதோ ஒரு பிரச்சினையை எழு (இ)ப்ப லாம்! எழு ப்பினால் … இன்னும் ஒரு 100! என்று பதிவிட்டிருக்கிறார்.
அதாவது, இந்து என்ற மதம் இன்று இந்து என்ற பிரச்சினையாக மாறிவிட்டது. இந்த விவதாதம் ஏதாவது பிரச்சினையை எழுப்பலாம் அப்படி பிரச்சினை வந்தால் பொன்னியின் செல்வன் படம் இன்னும் 100 கோடி ரூபாய் வரை வசூலித்துவிடும் என்று பார்த்திபன் மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறார்.
Crosses-400
— Radhakrishnan Parthiban (@rparthiepan) October 13, 2022
Crores!!!!
இந்து என்ற மதம்
இன்று
இந்து என்ற பிரச்சனையாக
மதம்மாறி விட்டது!
இந்த எழுத்தும் ஏதோ ஒரு
பிரச்சனையை எழு (இ)ப்ப லாம்!
எழு ப்பினால் …
இன்னும் ஒரு 100!