“அந்த Bgm எப்படி வரணும் நா” பொன்னியின் செல்வன் பின்னணி குறித்து மணிரத்னம் விளக்கம் - வைரலாகும் வீடியோ

ponniyin selvan 1 manirathnam film arr music background score explaination by maniratnam
By Swetha Subash Dec 09, 2021 07:32 AM GMT
Report

தமிழ் திரையுலகின் தனித்துவமான இயக்குனர் என்ற புகழுக்குறியவர் இயக்குனர் மணிரத்னம்.

தற்போது இவர் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், சரத்குமார், ஜெயராம், திரிஷா, ஐஷ்வர்யா ராய் பச்சன், ஐஷ்வர்ய லெக்‌ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்து கலக்கலான காம்போவில் உருவாகி வரும், தன் நீண்ட நாள் கனவாக இருந்த படம் தான் பொன்னியின் செல்வன்-1.

வரலாற்று காவியப்படமாக உருவாகும் இந்த படம் பல நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கபட்டு வருகிறது.

லைக்கா ப்ரொடக்‌ஷன்ஸ் மற்றும் மணிரத்னத்தின் மட்ராஸ் டாக்கிஸ் இணைந்து தயாரித்து வழங்கும் பொன்னியின் செல்வன-1 படத்திற்கு இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிபார்ப்பு நிலவி வரும் நிலையில் படத்தின் முதல் பாகம் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது .

படத்தின் முதல் பாகத்தில் 6 பாடல்களும், 2-ம் பாகத்தில் 6 பாடல்களுமாக மொத்தம் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில் ஏ.ஆர்.ரகுமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

மணிரத்னம் படத்தில் அமைக்கபட்டுள்ள ஒரு காட்சியை விவரித்து அதற்கு எப்படிபட்ட பின்னிசை வேண்டும் என இசைக்குழுவுடன் உரையாடும் வீடியோ பதிவை பகிர்ந்துள்ளார்.

தற்போது இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.