ஆடித் திருநாளில் வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Karthi Ponniyin Selvan: I Mani Ratnam
By Irumporai Jul 28, 2022 05:10 PM GMT
Report

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

பொன்னியின் செல்வன்

ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முன்னதாக இப்படத்தின் டீசரை தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் கடந்த ஜூலை 8 ஆம் தேதி வெளியிட்டது.

தமிழ்நாடு தாண்டி பிறமொழி ரசிகர்களிடையும் இந்த டீசர் பெரும் வரவேற்பைப் பெற்றது

ஆடித்திருநாள்

 முதல் பாடல் வரும் ஜூலை.31ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு போஸ்டரில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்கும் கார்த்தி இடம்பெற்றுள்ள நிலையில்,

ஆடித் திருநாளில்  வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு | Ponniyin Selvan 1 First Single Release Date

வந்தியத்தேவனுடன் ஆடித் திருநாள் கொண்டாட்டம் என்றும், பாடலின் பெயர் ’பொன்னி நதி’ என்றும் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் நாவம் ’புதுவெள்ளம்’ எனும் அத்தியாயத்துடன் ஆடிப்பெருக்கு நாளை மையமாகக் கொண்டு வந்தியத்தேவனுடன் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.