இணையதளத்தை கலக்கும் பொன்னியின் செல்வன் BTS - வைரலாகும் வீடியோ...!

Viral Video Ponniyin Selvan: I
By Nandhini Oct 10, 2022 10:12 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் பொன்னியின் செல்வன் BTS வைரலாகி வருகிறது.

‘பொன்னியின் செல்வன்’ படம்

தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனராக விளங்கும் மணிரத்னம், தனது கனவு படமான பொன்னியின் செல்வனை வெற்றிகரமாக இயக்கி முடித்துள்ளார்.

இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயராம், பாலாஜி சக்திவேல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. கடந்த செப்டம்பர் 30ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்போடு திரையரங்கில் வெளியானது. தற்போது இப்படம் மக்களின் பேராதரவுடன் மாபெரும் வசூலை அள்ளி வெற்றிப்படைத்துள்ளது.  

ponniyin-selvan-1-bts-viral-video

வைரலாகும் பொன்னியின் செல்வன் BTS

இப்படத்தில், பொன்னியின் செல்வனாக ‘அருள்மொழி வர்மன்’ கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயம் ரவி அசத்தலாக நடித்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார். இவரின் நடிப்புக்கு மக்களால் பாராட்டு குவிந்து வருகிறது.

இந்நிலையில், தற்போது சமூகவலைத்தளங்களில் பொன்னியின் செல்வன் BTS வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜெயம் ரவி படப்பிடிப்பு தளத்தில் நடித்துக் கொண்டிருக்க, கேமராமேன் தோளில் கேமராவை சுமந்துக்கொண்டு ஜெயம்ரவி வீடியோ எடுக்கிறார்.

தற்போது, இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள்  நடிகர், நடிகைகள் கஷ்டப்பட்டு நடிக்கிறார் என்று நாம் அனைவரும் பாராட்டுகிறோம். ஆனால், நடிகர், நடிகைகளை விட உண்மையான கஷ்டம் படப்பிடிப்பு தளத்தில் வேலை செய்யும் படப்பிடிப்பு குழுவினர்தான் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.