தமிழ் சினிமாவின் கனவு காவியம்.. பொன்னியின் செல்வன் படம் குறித்து வந்த சூப்பர் அப்டேட் !

Maniratnam PonniyinSelvan
By Irumporai Jul 19, 2021 12:13 PM GMT
Report

தமிழ் சினிமா இயக்குநர்களின் கனவாக இருந்த பொன்னியின் செல்வன் படத்தினை லைகா நிறுவன தயரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டத்தின் உச்சமாக தயாராகி வருகிறதுபொன்னியின் செல்வன்.

இந்த படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

அமரர் கல்கியின் கதையில் சோழர்களின் வரலாற்றை கூறும் இந்த பிரம்மாண்ட படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்து வந்தது,

பின் கொரோனா பிரச்சனை காரணமாக ஹைதராபாத்தில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வந்தது. கடந்த சில நாட்களாகவே படத்தின் முதல் பாகம் குறித்து வெளியாகும் தகவல் குறித்து ட்விட்டரில் அதிகம் கூறப்பட்டு வந்த நிலையில் படத்தின் முதல் பாகம் குறித்த குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது

அதன்படி படத்தின் முதல்பாகம்  அடுத்தாண்டு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது