பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் ஏற்பட்ட மரணம் - மணிரத்னம் மீது வழக்கு

death shooting movie ponniyan selvan
By Anupriyamkumaresan Sep 03, 2021 07:42 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சினிமா
Report

மணிரத்னம் தமிழ் சினிமாவின் பெருமையை இந்தியளவில் கொண்டு சென்றவர். இவர் இயக்கத்தில் தற்போது மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன்.

இப்படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வரவுள்ளது, இந்த இரண்டு பாகத்தையும் மணிரத்னம் தற்போது முடித்துவிட்டார், இந்நிலையில் ராஜா காலத்து கதை என்பதால் நிறைய குதிரை சம்மந்தப்பட்ட காட்சிகள் இப்படத்தில் உள்ளது.

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் ஏற்பட்ட மரணம் - மணிரத்னம் மீது வழக்கு | Ponniyan Selvan Movie Shoot Death Fir Filled

இதனால், நிஜ குதிரைகள் சிலவற்றை வைத்தே படப்பிடிப்பு நடத்தினர், கடந்த மாதம் ஐதராபாத்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் ஒரு சிறு விபத்து ஏற்பட்டது, அப்போது ஒரு குதிரை இறந்துள்ளது.

இதுக்குறித்து மெட்ராஸ் டாக்கீஸ் உரிமையாளர் மணிரத்னம் அவர்கள் மீதும், அந்த குதிரையின் உரிமையாளர் மீதும் வழக்கு போட்டுள்ளதாகவும், அதை தொடர்ந்து இதை விலங்கு நலவாரியம் விசாரணை செய்ய, மாவட்ட ஆட்சி தலைவருக்கு விலங்குகள் நல வாரியம் கடிதம் எழுதியுள்ளனர் என்று சில தகவல்கள் வெளிவந்துள்ளது.