பொன்னியன் செல்வன் பட காட்சிகள் கசிவு - அதிர்ச்சியில் படக்குழு

movie leaked ponniyan selvan scenes
By Anupriyamkumaresan Sep 07, 2021 01:57 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சினிமா
Report

சிறப்பு மிக்க வரலாற்று காவியமான கல்கியின் படைப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க முயற்சிகள் நடைபெற்று வந்தன. இதை இயக்குனர் மணிரத்னம் இயக்குவதாகவும் சொல்லப்பட்டது. படப்பிடிப்பு ஆரம்பித்த சில நாட்களிலேயே கொரோனாவினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக அந்த படப்பிடிப்பு பல மாதங்கள் முடங்கிய நிலையிலேயே இருந்தது.

அதன் பின்னர் வேறு படங்களில் நடிக்க சென்ற நடிகர், நடிகைகளை ஒன்று சேர்த்து மீண்டும் படப்பிடிப்பு பணிகள் தொடங்கப் பட்டது. மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், படபிடிப்பு தளத்தில் போர்க்காட்சி படபிடிப்பின் போது குதிரை ஒன்று இறந்ததன் காரணமாக இயக்குனர் மணிரத்னம் மீது ஒரு வழக்குப்பதிவு ப்ளூ கிராஸ் அமைப்பினால் செய்யப்பட்டது.

பொன்னியன் செல்வன் பட காட்சிகள் கசிவு - அதிர்ச்சியில் படக்குழு | Ponniyan Selvan Movie Scenes Leaked Shocking

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் நர்மதை நதிக்கரையில் உள்ள சிவாலயத்தில் த்ரிஷா செருப்பு அணிந்து நடந்து வரும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் திரிஷா மற்றும் மணிரத்னம் மீது நடவடிக்கை எடுக்கவும் இந்து அமைப்புகள் பலர் போலீசில் புகார் அளித்தனர். சில தினங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ராய் தோற்றமும் அவர் நடித்த காட்சியும் இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இப்போது மீண்டும் கார்த்தியுடன் த்ரிஷா நடித்த சில முக்கிய பாடல் காட்சியும், அவர்களின் தோற்றமும் இணையதளத்தில் கசிந்துள்ளன.

யாரோ ஒருவர் திருட்டுத்தனமாக இதை படம் பிடித்து வெளியிட்டுள்ளனர். என்றும் இதனால் அதிர்ச்சியான மணிரத்னம் காட்சிகளை கசியவிட்ட வரை கண்டித்து நடவடிக்கை எடுக்கும் படியும் வற்புறுத்தியுள்ளார்.

பொன்னியன் செல்வன் பட காட்சிகள் கசிவு - அதிர்ச்சியில் படக்குழு | Ponniyan Selvan Movie Scenes Leaked Shocking

இதனை தொடர்ந்து இனிமேல் படகாட்சிகள் வெளியில் வராதவாறு பார்த்துக் கொள்ளுமாறும் புகார் தெரிவித்து இருந்தார். மேலும் பட காட்சிகள் வெளியாவதை தடுக்க படப்பிடிப்பை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். இந்த படத்தில் விக்ரம், சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு ஜெயராம், பார்த்திபன், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.