தயாராக இருங்கள் சோழன் வருகிறான் : அப்டேட் கொடுத்த பொன்னியின் செல்வன் படக்குழு

Mani Ratnam
By Irumporai Jul 02, 2022 07:19 AM GMT
Report

தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு இயக்குனர் என்றால் அவர் மணிரத்னம் தான். தமிழ் சினிமாவில் தற்போது கொடிகட்டி பறக்கும் பல இயக்குனர்கள் மணிரத்னத்தின் ரசிகர்கள் தான்.

பொன்னியின் செல்வன்

திரையுலகில் ஒரு சில இயக்குனர்களுக்கே ரசிகர் கூட்டம் இருக்கும். அதில் ஒருவர் தான் மணிரத்னம். இந்நிலையில் பல ஆண்டுகாலமாக பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுக்கவேண்டும் என முயற்சித்து வந்தார் மணிரத்னம்.

தயாராக இருங்கள் சோழன் வருகிறான் : அப்டேட் கொடுத்த பொன்னியின் செல்வன் படக்குழு | Ponnien Selvan Maniratinam

தற்போது அந்த கனவு அவருக்கு நினைவாகியுள்ளது. மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் மிகப்பிரமாண்டமாக உருவாகி வருகின்றது.இந்த ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா தஞ்சாவூரில் மிகப்பிரம்மாண்டமாக நடக்கயிருந்தது.

சோழன் வருகிறான் 

ஆனால் சில காரணங்களால் இசை வெளியீட்டு விழா தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் மெட்டராஸ் டாக்கீஸ் தனது சமூக வலைத்தளபக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர் அதில் காத்திருங்கள் சோழன் வருகிறான் என புலிக்கொடி பறப்பது போல வீடியோ வெளியிட்டுள்ளனர் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.