செலவ பாத்துக்குறோம்னு சொல்லிட்டு GHல விட்டாங்க : ரஜினி செயலால் நொந்துபோன பொன்னம்பலம்
தனது சிகிச்சைக்கு உதவாமல் ரஜினி காந்த் ஏமாற்றியதாக பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
பொன்னம்பலம்
தமிழ் சினிமாவில் தனது வில்லத்தனமான நடுப்பின் மூலமாக மிரட்டியவர் நடிகர் பொன்னம்பலம் , குறிப்பாக நாட்டாமை படத்தில் வில்லனாக நடித்து நம்மை மிரட்டியிருப்பார் குறிப்பாக அதில் தனது தாயாராக நடித்திருக்கும் மனோரமாவை ஏய் தாய் கிழவி என இவர் மிரட்டும் தோணியில் உள்ள பேச்சு தற்போது வரை பிரபலமாக உள்ளது.
இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிரபல நடிகரான பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் இருந்து பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார். இந்நிலையில் சிறுநீரக அதிலிருந்து எப்படி நடந்தது என்பதை பற்றி அதிர்ச்சியூட்டும் விஷியத்தை சமீபத்தில் உடகாத்திற்கு கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்
ஏமாற்றிய ரஜினி
அதில் எனக்கு உடல்நிலை சரியில்லாத போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் உதவி கேட்டேன் அவர் தொடக்கத்தில் 50ஆயிரம் ரூபாய் கொடுத்தார். ஆனால் அது என்னுடைய கைக்கு வரவில்லை ஆனால் கட்டணம் போன்றவற்றிக்கு சென்று விட்டது. இதனால் பொருளாதார ரீதியாக சிரமத்தில் இருந்த நான் மீண்டும் ரஜினிகாந்திடம் பணஉதவி கேட்டேன் நான் ரஜினிகாந்திடம் இருந்து பெரிய தொகையை எதிர்பார்த்தேன்.
ஆனால் அவர் 50ஆயிரம் ரூபாய் தான் கொடுத்தார். அதற்கு பிறகு அவருடைய மனைவி கவலைப்பட வேண்டாம் என்றும், அவருடைய சிகிச்சை செலவு முழுவதையும் தான் பார்த்துக்கொள்வதாக நம்பிக்கை அளித்தார். ஆனால் என்னை சேர்க்க அரசு மருத்துவமனையை தேடிக்கொண்டிருந்தார்கள். அரசு மருத்துவமனையை நான் குறை சொல்லவில்லை.
இருந்தாலும் அங்கே மருந்துகள் வாங்க வரிசையில் நிற்க வேண்டும் சிகிச்சை முடிவதற்க்கே மூன்று ஆண்டுகள் ஆகும் என்று தெரிவித்தார் பொன்னம்பலம் நடிகர் பொன்னம்பலம் இதற்கு முன்னர் கூட நடிகர் அஜித்தை தன்னுடை தம்பி போல நினைத்தேன் ஆனால் அவர் ஒரு போன் கூட பண்ணவில்லை என்றும். விஜய் போன் எப்படி இருக்கிறேன் என்று தெரிந்தும் கூட விசாரிக்கவில்லை என்று கூறினார்.
மேலும் தனக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி போன் போட்டதும் 40 லட்சம் கொடுத்தார் எனவும் பல தெலுங்கு நடிகர்கள் ஏனக்கு உதவி செய்தனர் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.