Friday, May 2, 2025

செல்லாக்காசான சசிகலாவை வைத்து தமிழ்நாட்டில் பாஜக சாதிக்க முடியுமா? : பொன்னையன்

ADMK V. K. Sasikala
By Irumporai 3 years ago
Report

செல்லாக்காசான சசிகலா, தினகரனை வைத்து தமிழ்நாட்டில் பாஜக என்ன சாதித்து விட முடியும் என அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக தலைவர்கள் இடையே முக்கியமான சில விஷயங்களில் கருத்து வேறுபாடு உள்ளதாக சமீபத்திய அரசியல் களத்தில் பேசப்படுகிறது. இந்த நிலையில் அதிமுகவின் அம்மா பேரவை மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் பேசிய அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன்னையன், `காவிரி நீர் பங்கீடு தமிழக்திற்கு வர பாஜக போர்க்கொடி பிடித்திருக்க வேண்டும். அதுதான் பாஜகவை வளர்க்கும். ஆனால் அதற்கு பதிலாக, பாஜகவினர் `அதிமுக பின்னுக்கு தள்ளும் வகையில் மறைமுக பிரச்சாரத்தை பாஜக செய்து வருவதாக கூறிய பொன்னையன்.

செல்லாக்காசான சசிகலாவை வைத்து தமிழ்நாட்டில் பாஜக சாதிக்க முடியுமா? : பொன்னையன் | Ponnaiyan Says Aiadmk Members Should Expose Bjp

இனி வரும் காலங்களில் அதிமுகவினர் எச்சரிக்கையாவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக நிலைப்பாடு குறித்து சமூக ஊடகங்கள் மூலம் அதிமுகவினர் அம்பலப்படுத்த வேண்டும் என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சசிகலா பாஜக விற்கு வந்தால் வரவேற்போம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பிரபல ஊடக நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் ‘‘செல்லாக்காசான சசிகலா மற்றும் தினகரனை வைத்து தமிழகத்தில் பாஜக என்ன சாதித்து விட முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ,மக்கள் மத்தியில் சசிகலா மீது தவறான அபிப்பிராயம் இருப்பதகாவும் , அதிமுகவில் சசிகலாவினை இணைப்பதால் எந்த வளர்ச்சியும் இருக்கப்போவதில்லை என அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.