பணிந்த ஆளுநர் ஆர்.என்.ரவி - இன்று மீண்டும் அமைச்சராகும் பொன்முடி..! எந்த துறைக்கு தெரியுமா..?
பொன்முடிக்கு இன்று மாலை மீண்டும் அமைச்சர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
பொன்முடி வழக்கும் - திமுக வழக்கும்
சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிப்பட்டதன் பேரில் அமைச்சர் பதவி மட்டுமின்றி சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்தார் பொன்முடி.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அவ்வழக்கு விசாரணையில் அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பொன்முடிக்கு அமைச்சர் பதவி பிராமணம் செய்துவைக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என் ரவிக்கு கடிதம் எழுதினார்.ஆனால், ஆளுநர் தண்டனைதான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி இல்லை என நிரூபிக்கப்படவில்லையே என பதவி பிராமணம் செய்துவைக்க மறுத்தார்.
எந்த துறை..?
இதனையடுத்து பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதன் படி, இன்று ஒருநாளைக்குள் அமைச்சராக பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கெடுவிதித்தது உச்சநீதிமன்றம்.
உச்சநீதிமன்ற கெடுவை தொடர்ந்து இன்று மாலை 3:30 மணிக்கு பொன்முடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்க முன்வந்துள்ளார். அவருக்கு மீண்டும் அவர் வகித்து வந்த உயர்கல்வி துறை ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளிவந்துள்ளது.