பட்டமளிப்பு விழா தாமதமாவதற்கு காரணம் ஆளுநர்தான் : அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு
பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழா தாமதமாவதற்கு காரணம் ஆளுநர்தான் காரணம் என அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டியுள்ளார்.
தாமதமாகும் பட்டமளிப்பு விழா
திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள இக்கல்லூரிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடத்தப்படாததால், மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் உள்ளனர்.
உயர் கல்வித்துறை அமைச்சகம் மற்றும் ஆளுநர் மாளிகை அலுவலகம் இடையிலான பனிப்போரே, பட்டமளிப்பு விழா நடைபெறாததற்கு காரணம் என பல்வேறு ஆசிரியர் சங்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
அமைச்சர் குற்றச்சாட்டு
சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவும் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் தேதியை பல்கலைக்கழக நிர்வாகம் எதிர்பார்த்து இருந்ததால், ஜூன் 5 ஆம் தேதியில் இருந்து 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த தேதியும் பட்டமளிப்பு விழா நடைபெற வாய்ப்பு இல்லை என்றும், இம்மாத இறுதிக்குள் விழாவை நடத்த முயற்சிப்பதாகவும் பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா தாமதமாவதற்கு ஆளுநரே காரணம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார்.