‘ ‘10 வருஷமா அமைச்சரா இருந்து என்ன பண்ணீங்க’’ : செல்லூர் ராஜூவை விமர்சித்த பொன்முடி

ponmudi sellurraju
By Irumporai Sep 03, 2021 06:53 AM GMT
Report

10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்தும் செல்லூர் ராஜு ஒரு கல்லூரியை கூட உருவாக்கவில்லை என சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் 10வது நாளாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது அதிமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ மதுரை மேற்கு தொகுதியில் இருபாலர் அரசு கல்லூரி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதில் கூறிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி :

மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 3 அரசு கல்லூரிகள், 17 அரசு உதவி பெறும் கல்லூரிகள் உள்ளிட்ட பல கல்லூரிகள் உள்ளது.  மேலும் கடந்த 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த செல்லூர் ராஜு அவர் தொகுதியில் ஒரு கல்லூரி கூட ஏற்படுத்தவில்லை என்பது ஆச்சரியமாக இருப்பதாக கூறிய பொன்முடி.

, ஒரு கல்லூரி அமைப்பது சாதாரண விஷயமல்ல. 34 ஆசிரியர்கள், ஆண்டுக்கு ரூ.2.25 கோடி ஊதியம், கட்டுமான பணிக்கு 12 கோடி தேவை எனக் கூறினார்.