‘ஞாயிறுக்கப்புறம் திங்களு.. தை பொறந்தா பொங்கலு...’ - பாட்டு பாடி இயக்குநர் டி.ராஜேந்திரர் பொங்கல் வாழ்த்து...!
Thai Pongal
TRajendar
By Nandhini
இயக்குநர் டி.ராஜேந்திரர் பொங்கல் வாழ்த்து
எத்தனை பண்டிகைகள் வந்தாலும் மிகவும் உற்சாகமாக, ஆரவாரமாக தமிழர்கள் கொண்டாடுவது 2 பண்டிகைகளை மட்டுமே. ஒன்று பொங்கல் மற்றொன்று தீபாவளி.
இந்த இரு பண்டிகைகளும் தமிழர்களின் வாழ்வில் இரண்டற கலந்துவிட்டது. தைத்திருநாள், தமிழர் திருநாள், பொங்கல் திருநாள் என பல பெயர்கள் கொண்ட பொங்கல் பண்டிகையை தமிழர்கள் இன்று வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள்.
புது புத்தாடை உடுத்தி, இனிப்பு, பலகாரங்கள் செய்து, புது பானையில் பொங்கல் வைத்து கதிரவனுக்கு படைத்து தமிழகர்கள் இன்று கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில், தைப்பொங்கலை முன்னிட்டு இயக்குநர் டி.ராஜேந்திரர் பாட்டு பாடி தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.