மழை பாதித்த மாவட்டங்கள் - ரூ.1000 பொங்கல் பரிசு - தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு..!
பொங்கல் இன்னும் இரண்டு வாரங்களில் வரவுள்ள நிலையில், பொங்கல் பரிசு தொகை வழங்கப்படுமா?என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
பொங்கல் பரிசு
தொகை தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் தினத்தை முன்னிட்டு, அரசின் சார்பில் பொங்கல் பரிசு தொகை வழங்கப்படும். பச்சரிசி, கரும்பு, வெள்ளம் போன்றவற்றுடன் பணமும் ரேஷன் அட்டைக்காரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
ஆனால், இந்த வருடம் இந்த பரிசு தொகை வழங்கப்படுமா? என்ற சந்தேகம் அதிகளவில் எழுந்துள்ளது. அதற்கு காரணம் மழை - வெள்ளம் பாதிப்புகள். ஏனென்றால், மழை பாதித்த சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் நிவாரண நிதியாக ரூ.1000 முதல் ரூ.6000 வரை வழங்கப்படுகிறது. அதே போல, மகளிர் உரிமை தொகையும் தற்போது அளிக்கப்படுகிறது.
மழை பாதித்த பகுதிகள்
இதன் காரணமாக, இந்த பொங்கல் பரிசு தொகை இந்த ஆண்டு இருக்குமா..? என்ற சந்தேகம் வந்துள்ளது.ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகையை வழங்கப் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ரூ.1000 மட்டுமின்றி ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பும் வழங்கப்படவுள்ளதாகவும் அதனை வரும் 10-ஆம் தேதிக்குள் அளித்திடவும் தமிழக அரசு முடிவெடுத்ததாக தகவல்கள் வருகின்றது.
இது வெள்ள பாதித்த பகுதிகளான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களிலும் வழங்கப்படும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.