பொங்கல் பரிசு அறிவிப்பு - என்னவெல்லாம் இருக்கு தெரியுமா?
தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு
தமிழகத்தில் ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்புடன் தலா ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் வழங்கப்பட்டது.
அந்தவகையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புக்கு ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
அரசாணை
இந்நிலையில் தமிழ்நாட்டில் பொங்கலை முன்னிட்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 கரும்பு ஆகியவற்றை அடங்கிய தொகுப்பிற்கான நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, இதுவரை வழங்கப்படாத ரொக்கத்தை வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.