10 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கலுக்கு புதிய டிசைனில் வேட்டி, சேலை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

M K Stalin Government of Tamil Nadu
By Thahir Nov 19, 2022 07:35 AM GMT
Report

10 ஆண்டுகளுக்கு பிறகு புதிய டிசைனில் வேட்டி, சேலை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

புதிய டிசைனில் வேட்டி, சேலை 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும், குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு புதிய டிசைனில் இலவச வேட்டி, சேலை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

pongal-new-design-dhoti-saree-cm-order

அந்த வகையில் 15 டிசைன் மற்றும் நிறங்களில் சேலைகள் வழங்க உள்ளதாகவும், 5 டிசைனில் வேட்டி வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பெண்களுக்கான இலவச வேட்டி, சேலையை 2023 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதிக்குள் வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.