பொங்கலுக்கு 5 நாள் விடுமுறை அறிவிப்பு - முழு விவரம் இதோ..
பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு அரசு கூடுதலாக விடுமுறை அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
பொங்கல் பண்டிகை
தமிழ்நாடு அரசு ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ ப. அரிசி, ஒரு முழுக்கரும்பு மற்றும் ரூ. 3000 ரொக்கப் பரிசு வழங்கிவருகிறது.

மேலும், சிறப்பு பேருந்துகளையும், தெற்கு இரயில்வே சிறப்பு இரயிலையும் இயக்க முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விடுமுறை
இந்நிலையில் ஜனவரி 14ஆம் தேதியும் விடுமுறை விடப்படுமா எனும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதன்படி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14-ந்தேதி போகிப் பண்டிகை முதல் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக பள்ளிகல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து வருகிற 19-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.