இன்று முதல் உங்கள் வீடு தேடி வருகிறது பொங்கல் பரிசு டோக்கன்

Government of Tamil Nadu
By Thahir Jan 03, 2023 01:17 AM GMT
Report

இன்று முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை வீடு வீடாக சென்று பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் வழங்கப்பட உள்ளது.

இன்று முதல் பொங்கல் பரிசு டோக்கன்

பொங்கல் பரிசாக பொதுமக்களுக்கு ரூ.1,000 ரொக்க பணம், ஒரு கிலோ பச்சரிசி, கரும்பு மற்றும் சக்கரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Pongal gift token distribution from today

தமிழ்நாட்டில் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில், இன்று முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை வீடு வீடாக சென்று பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் வழங்கப்பட உள்ளது.

டோக்கனில் பொங்கல் பரிசு வழங்கப்படும் தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்று இருக்கும். பொங்கல் பரிசுத் தொகுப்பு தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக்கடைகளில் ஜன.9 முதல் 12-ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. விடுபட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு ஜன.13-ஆம் தேதி வழங்கப்படுகிறது.