பொங்கல் பரிசு: இன்று முதல் வீடு தேடி வரும் டோக்கன் - முக்கிய உத்தரவு!
Thai Pongal
M K Stalin
Tamil nadu
By Sumathi
பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன் இன்றும் நாளையும் வீடுவீடாக விநியோகம் செய்யப்படவுள்ளது.
டோக்கன் விநியோகம்
பொங்கல் பண்டிகையை கொண்டாட 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இவை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும்
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு இவை வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், ரூ.1000 ரொக்கம் பெறுவதற்கான டோக்கன் இன்றும், நாளையும் விநியோகம் செய்ய ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியினை ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதலமைச்சரும் மாவட்டங்களில் அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.