பொங்கல் பரிசுத் தொகுப்பு.. இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை இன்று தொடங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைக்கிறார்.
பொங்கல்
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை 14 ,15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
இதற்காகத் தமிழ்நாடு அரசு ரூ. 250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு காரணமாக அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரணம் வழங்கிப்பட்டது. இந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ 1000 வழங்கவில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.
பரிசுத் தொகுப்பு
இதனையடுத்து கடந்த 3 ஆம் தேதி முதல் அனைத்து மண்டல இணை பதிவாளர்கள் தலைமையில் ரேஷன் கடைகள் மூலம் பரிசு தொகுப்பு விநியோகம் செய்வதற்காக டோக்கன்களை ரேஷன் கடை ஊழியர்கள் வீடுவீடாக சென்று விநியோகம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. அதன்படி, சென்னை சைதாப்பேட்டை சின்ன மலையில் உள்ள ரேசன் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பைக் காலை 9 மணிக்குத் தொடங்கி வைக்கிறார்.