பொங்கல் தொகுப்பு அறிவிப்பு - என்னென்ன தெரியுமா?

Pongal tamilnadu government things announce
By Anupriyamkumaresan Nov 17, 2021 06:59 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

பொங்கல் பண்டிகைக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு அளிக்கப்படவிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

2022-ம் ஆண்டு வரவுள்ள பொங்கல் பண்டிகையின்போது, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசின் சார்பில் வெளியாகியிருக்கும் தமிழக அரசின் ஆணையின்படி பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் வழங்கப்படும்;

பொங்கல் தொகுப்பு அறிவிப்பு - என்னென்ன தெரியுமா? | Pongal Festival Things Tamilnadu Govt Announced

கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, ரவை, கோதுமை, உப்பு ஆகிய பொருட்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்திருக்கிறார்.

மொத்தமாக இந்த பொங்கல் பரிசு பெட்டகத்தில் 2,15,48,060 குடும்பங்களுக்கு ரூ.1,088 கோடி செலவில் பொங்கல் பொருட்கள் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.