பொங்கல் தொகுப்பில் முழுக்கரும்பு - தமிழக அரசு அதிரடி அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

provide pongal festival full sugarcane
By Anupriyamkumaresan Nov 17, 2021 01:29 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

பொங்கல் தொகுப்பில் முழுக்கரும்பும் இடம்பெறும் என தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார்.

2022-ம் ஆண்டு வரவுள்ள பொங்கல் பண்டிகையின்போது, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசின் சார்பில் வெளியாகியிருக்கும் தமிழக அரசின் ஆணையின்படி பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் வழங்கப்படும்; கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, ரவை, கோதுமை, உப்பு ஆகிய பொருட்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

பொங்கல் தொகுப்பில் முழுக்கரும்பு - தமிழக அரசு அதிரடி அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி | Pongal Festival Things Full Sugarcane Provide

இந்த பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாததால் விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கரும்பும் பொங்கல் தொகுப்பில் இடம்பெற முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளதாக, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார்.

20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு துணிப்பையுடன் முழுக்கரும்பும் இடம்பெறும் என அவர் அறிவித்திருக்கிறார்.