தமிழகம் முழுவதும் பொங்கல் விழா கொண்டாட்டம் கோலாகலம்..!
Thai Pongal
Festival
By Thahir
தமிழகம் முழுவதும் பொங்கல் விழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பொங்கல் விழா கோலகலம்
சூரியனுக்கும், இயற்கை மற்றும் உழவுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, வீடுகளின் முன்பு வண்ண கோலமிட்டு, பொங்கல் பானைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, மஞ்சள் செடியை கட்டி, மங்களகரமாக புத்தரிசியில் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
பொங்கல் பொங்கி வரும் போது “பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல்” என கூறி மகிழ்ச்சி அடைந்தனர்.