தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி - பொங்கல் போனஸ் அறிவிப்பு

Thai Pongal Government of Tamil Nadu
By Thahir Dec 27, 2022 01:54 AM GMT
Report

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸை அறிவித்துள்ளது.

முதலமைச்சர் உத்தரவு 

தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Pongal bonus announcement for Tamil Nadu government employees

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, 'சி' மற்றும் 'டி' பிரிவைச் சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3,000 மிகை ஊதியம் வழங்கப்படும்.

அரசிற்கு ரூ. 221 கோடியே 42 லட்சம் செலவு

தொகுப்பூதியம், சிறப்புக் கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள், மற்றும் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து சில்லறை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூ.1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.

"சி" மற்றும் "டி" பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள். முன்னாள் கிராம பணியமைப்பு (முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள்ஆகியோருக்கும் ரூ. 500 வழங்கப்படும். மேற்கூறிய மிகை ஊதியம், பொங்கல் பரிசு வழங்குவதன் மூலம் அரசிற்கு ரூ. 221 கோடியே 42 லட்சம் செலவு ஏற்படும்.