புதுச்சேரியில் 5 ரூபாய் உணவு பொட்டல விற்பனையை தொடங்கி வைத்தார் தமிழிசை சவுந்தராஜன்
புதுச்சேரியில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மலிவு விலையில் 5 ரூபாய்க்கு உணவுப் பொட்டலங்கள் விற்பனையை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது, இந்த கொரோனா பரவல் காரணமாக பல்வேறு, துறைகள் நிறுவனங்கள் முடங்கியுள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, அதிகப்படியான மக்கள் அன்றாட உணவிற்கு கூட கஷ்டப்பட கூடிய சூழல் உருவாகியுள்ளது.
இதனை சரி செய்யும் வகையிலும் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்கிட துணைநிலை ஆளுநர் முடிவு செய்தார், அதன்படி புதுச்சேரியில் மக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய மருத்துவமனைகள் பேருந்து நிலையங்களில் உள்ள பான்லே பாலகங்கள் மூலம் மலிவு விலையில் உணவு விற்பனை செய்யும் திட்டத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் ஐந்து ரூபாய்க்கு சாம்பார் சாதம், தயிர் சாதம், வெஜிடபிள் சாதம் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவு பொட்டலங்கள் விற்பனை செய்யப்படுகிறது, இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனை வாயிலில் உள்ள பான்லே பாலகத்தில் துணைநிலை ஆளுநரின் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் தொடர்ந்து படிப்படியாக புதுச்சேரியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் துணைநிலை ஆளுநர் கூறியிருக்கிறார்.