Friday, Jul 11, 2025

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா பாதிப்பு

corona cm pondy affect
By Praveen 4 years ago
Report

 புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா உறுதியானதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல்வர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட உள்ளார். மே 7-ஆம் தேதி புதுச்சேரி முதல்வராக பதவி ஏற்ற நிலையில் தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.