புதுச்சேரி சபாநாயகர் தனது பதவியை ராஜினாமா செய்தார்

party dmk congress aiadmk
By Jon Mar 02, 2021 03:46 PM GMT
Report

புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக, துணை நிலை ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகராக இருந்து வந்த காங்கிரசை சேர்ந்த லாஸ்பேட்டை எம்.எல்.ஏ. சிவக்கொழுந்து, அந்த பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக துணைநிலை ஆளுநருக்கும், சட்டப்பேரவை செயலருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

2016 தேர்தலில் முதன்முதலாக காங்கிரஸ் சார்பில் லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சிவக்கொழுந்து, 2019-ம் ஆண்டு சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசில் உறுப்பினராக இருந்த சிவக்கொழுந்துவின் சகோதரர் ராமலிங்கம், அமித்ஷா முன்னிலையில் இன்று பா.ஜ.க.வில் இணைந்த நிலையில், சிவக்கொழுந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரியில் தற்போது குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.