புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: தேர்தலுக்கு பிந்தைய வெளியான கருத்துக்கணிப்பு

election party result survey pondichery
By Praveen Apr 29, 2021 05:38 PM GMT
Report

புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்று ஆட்சியை கைப்பற்றும் என இன்று வெளியிடப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்துள்ள நிலையில் பல்வேறு தொலைக்காட்சிகள் மற்றும் கருத்து கணிப்பு நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன. தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலுக்கான 8ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து முடிந்தது.

மொத்தமாக தமிழகம் 234,அஸ்ஸாம் 126, கேரளா 140, புதுவை 30, மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மே 2ம் தேதி 5 மாநிலங்களுக்குமான சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. இதையடுத்து இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன.

இதில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தையக் கருத்துக் கணிப்புகள் வெளியிட்டுள்ளன. 

ரிபப்ளிக் டிவி - சிஎன்எக்ஸ் :

என்ஆர் காங்கிரஸ் கூட்டணி 16 முதல் 20 இடங்களை கைப்ற்றும்.

காங்கிரஸ் கூட்டணிக்கு 11 முதல் 13 இடங்களே கிடைக்கும்.

ஏபிபி - சி வோட்டர் :

என்ஆர் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 19 முதல் 23 இடங்கள் கிடைக்கும்.

காங்கிரஸ் கூட்டணி 6 முதல் 10 இடங்களையும், மற்றவைகள் 1 முதல் 2 இடங்களையும் பிடிக்கும்.

30 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் கூட்டணியில் பாஜக, அதிமுக இடம்பெற்றது. காங்கிரஸ் கூட்டணியில் திமுக இடம்பெற்றிருந்தது.