சத்தியம் கூட பண்றேன்; அந்த விவகாரத்தில் மோடி சொல்வது உண்மை - ஸ்டாலினுக்கு சவால் விடும் பொன் மாணிக்கவேல்
இந்து கோயில்களை தமிழக அரசு ஆக்கிரமித்திருப்பது உண்மைதான் என பொன். மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
மோடி கருத்து
பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயில்களை திமுக அரசு ஆக்கிரமித்துள்ளதாக குற்றம்சாட்டினார். இந்தப் பேச்சு நாடு முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியது.
இந்நிலையில், இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இந்து கோயில்களை திமுக அரசு ஆக்கிரமித்துள்ளதாக பிரதமர் கூறிய குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுக்கிறேன்.கடந்த 2 ஆண்டுகளில் 1000 கோயில்களுக்கு திமுக அரசுதான் குடமுழுக்கு செய்திருக்கிறது.
பொன். மாணிக்கவேல் சவால்
இது குற்றமா? கோயில்களுக்கு சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை மீட்டிருக்கிறோமே.. அது தவறா? என ஆவேசமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது, சிலை தடுப்பு முன்னாள் ஐஜி பொன். மாணிக்கவேல் தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயில்களை தமிழக அரசு ஆக்கிரமித்து வைத்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார் அல்லவா? அது நூற்றுக்கு 2 லட்சம் சதவீதம் உண்மை. ஸ்டாலின் சொல்வது பச்சை பொய்.
சத்தியம் கூட செய்யுறேன். நான் கூறுவது பொய்யாக இருந்தால் இன்னைக்கு நைட்டு நான் செத்து போயிருவேன் சார். என்னங்க அநியாயம் இது?
நான் ஆதாரத்தை எடுத்துட்டு வர்றேன். ஸ்டாலின் என் கூட பேச தயாரா இருக்காரா? என சவால் விடுத்துள்ளார்.