அரசியலில் பங்கேற்க வாய்ப்புள்ளது : ஓய்வுபெற்ற அதிகாரி சகாயம் பரபரப்பு பேச்சு
அரசியலில் பங்கேற்கவுள்ளதாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவலூர் மாவட்டம் ஆத்தூரில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் தனது குடும்பத்துடன் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அவர்கள் பங்கேற்றார்.
பின்னர் பேசிய சகாயம், மக்கள் பாதை தொடர்ந்து சமூக மாற்றத்திற்காக களத்தில் இயங்கி வருகிறது. நிர்வாக மாற்றங்களை இது வருங்காலத்தில் உருவாக்கக்கூடும். நான் மிகவும் நேசிக்கக்கூடிய தமிழ் சமூகம் அடிமைத்தனத்திலிருந்து விழித்தெழ வேண்டும், அதனை தட்டியெழுப்பும் விழிப்புணர்வு பரப்புரை செய்யவேண்டும் என்று தொடர்ந்து சொல்லிவருகிறேன் என கூறினார்.
மேலும், எம்முடைய தமிழ் சமூகம் நேர்மையான சமூகமாக இருந்திருந்தால், அது நேர்மையான தலைவர்களை வெளிக்கொணர்ந்திருக்கும். நேர்மையான தலைவர்கள் இருந்திருந்தால், இந்திய நாட்டில் மட்டுமின்றி உலக சமூகங்களிலேயே ஒப்பற்ற சமூகமாக தமிழ் சமூகம் திகழ்ந்திருக்கும்.