கருத்து கணிப்புகள் ஊக்கம் மட்டுமே, வாக்குகளே வெற்றியை தரும் - மு.க.ஸ்டாலின் அறிவுரை

election dmk stalin aiadmk
By Jon Mar 25, 2021 11:24 AM GMT
Report

கருத்து கணிப்புகள் ஊக்கம் தந்தாலும், வாக்குகளே வெற்றியை தரும். ஒவ்வொரு வாக்கையும் கவனமாக சேகரியுங்கள் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில், சட்டமன்ற தேர்தலுக்கு சில நாட்களே உள்ளது அதனால் அரசியல் கட்சிகளும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், எந்த கட்சி ஆட்சியினை பிடிக்க போகின்றது என்ற கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியாகி வருகின்றன். அதில் பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள், திமுக தான் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பதிவில் கருத்துக் கணிப்பு முடிவுகளால் அலட்சியமாக இருக்க வேண்டாம்.

திமுகவினர் அயராது உழைக்க வேண்டும். கருத்து கணிப்புகள் ஊக்கம் தந்தாலும், வாக்குகளே வெற்றியை தரும். ஒவ்வொரு வாக்கையும் கவனமாக சேகரியுங்கள் என்றும், தோழமை சக்திகளுக்கு தோல் கொடுத்திட வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.