மிக மோசமான சாதனைக்கு சொந்தக்காரரான பொல்லார்டு - சோகத்தில் ரசிகர்கள்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரும் கேப்டனுமான கைரன் பொல்லார்டு மிக மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனிடையே இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்டு தான் சந்தித்த முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் பொல்லார்டு 15வது முறையாக டக் அவுட்டாகியுள்ளார். இந்த பட்டியலில் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் 24 முறை டக் அவுட்டாகி இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இதில் பிரையன் லாரா, ஃபில் சிம்மன்ஸ், ட்வைன் ஸ்மித் ஆகிய 3 வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும்தலா 14 முறை டக் அவுட்டாகியுள்ள சாதனையை பின்னுக்கு தள்ளியதே அந்த மோசமான சாதனையாகும்.