அம்பயர் மீது பந்தை எறிந்த மும்பை வீரர் பொல்லார்ட் - வைரலாகும் வீடியோ

Kolkata Knight Riders Mumbai Indians TATA IPL IPL 2022 Kieron Pollard
By Petchi Avudaiappan May 11, 2022 05:46 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

கொல்கத்தா அணியுடனான ஆட்டத்தின் போது மும்பை வீரர் கெய்ரன் பொல்லார்ட் செய்த சம்பவம் ஒன்று வைரலாகியுள்ளது. 

நடப்பு ஐபிஎல் தொடரின் 56 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் நேற்று முன்தினம் மோதின. இப்போட்டியில் கொல்கத்தா அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்தது.மும்பை சார்பில் பும்ரா 5 விக்கெட்டுகளையும், குமார் கார்த்திகேயா 2 விக்கெட்டுகளையும், டேனியல் சாம்ஸ் மற்றும் முருகன் அஷ்வின் தலா ஒரு விக்கெட்டும்வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய மும்பை அணியில் இஷான் கிஷன் மட்டும் பொறுப்புடன் விளையாடி 51 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் ரன் குவிக்க தவறினர். இதனால் அந்த அணி 113 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.இதுவரை 11 போட்டிகளில் ஆடியுள்ள மும்பை அணி 2 வெற்றிகளுடன் கடைசி இடத்தில் புள்ளிப்பட்டியலில் உள்ளது.

இதனிடையே இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸின் போது 10வது ஓவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் பொல்லார்ட் வீசினார். அந்த ஓவரின் 5வது பந்தை வீச பொல்லார்ட் ஓடிவந்தார். க்ரீஸில் வந்து அவரது கையில் இருந்த பந்தை கையில் இருந்து வெளியேற்றமுயன்ற போது அது தவறுதலாக பின்புறமாக சென்று நடுவர் மீது பட்டது. இதனையடுத்து நடுவரிடம் உடனடியாக பொல்லார்ட் மன்னிப்பு கோர அதற்கு நடுவர் புன்னகைத்தார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.