ஒருவழியா கல்யாணம் ஆகிடுச்சு - வெளிநாட்டு மனைவியுடன் குத்தாட்டம் போட்ட 90ஸ் கிட்!
இளைஞர் ஒருவர் மெக்ஸிகோ நாட்டுப் பெண்ணை காதலித்து தமிழ் முறைப்படி திருமணம் செய்துள்ளார்.
மெக்ஸிகோ காதல்
கோவை, பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் தண்டபாணி - கிருஷ்ணவேணி தம்பதி. இவர்களின் மகன் சௌத்ரிராஜ். தண்டபாணி அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். மகன் படிப்பை முடித்துவிட்டு மெக்ஸிகோவில் வேலை பார்த்து வந்த நிலையில்,
டனியலா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். தொடர்ந்த், இருவரது வீட்டாரும் சம்மதித்த நிலையில் ஆனைமலையில் தமிழ்முறைப்படி இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.
பொள்ளாட்சியில் கல்யாணம்
இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மணப்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மெக்ஸிகோ நாட்டில் இருந்து பொள்ளாச்சி வந்தனர். மிகவும் கொண்டாட்டத்துடன் நடைபெற்ற திருமணத்தில், மாப்பிள்ளையும், இரு வீட்டாரும் நடனமாடிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வெளிநாட்டு பெண்ணுடன் நடைபெற்ற இந்த திருமணத்தை உள்ளூர் மக்கள் ஆச்சர்யத்துடனும் ஆர்வத்துடனும் கண்டுரசித்தனர்.