பொள்ளாச்சியில் மீண்டும் பயங்கரம்..குடும்ப பெண்களின் ஆபாச புகைப்படம் இருப்பதாக மிரட்டி பணம் பறிப்பு

Arrest Case Assault Pollachi Sexual
By Thahir Nov 04, 2021 12:15 PM GMT
Report

பொள்ளாச்சியில் ஆபாச படங்கள் இருப்பதாக வங்கி அதிகாரியின் கணவரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

கரூரைச் சார்ந்த வங்கி உதவி மேலாளராக பணியாற்றி வரும் பெண் அதிகாரி, மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், "தனது கணவனின் செல்போனுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர், பெண்ணின் ஆபாச படத்தை அனுப்பி எனது ஆபாச படம் அவனிடம் இருப்பதாக கூறி கூகுள் பே வழியாக ரூ. 49 ஆயிரம் பணத்தை பறித்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அதிகாரிகள், மர்ம ஆசாமியின் அலைபேசி எண் மற்றும் அவன் பயன்படுத்திய வங்கி கணக்கு எண் குறித்த தகவலை பெற்று விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

இந்த விசாரணையில், வங்கி பெண் அதிகாரியின் கணவர், வீட்டில் தனிமையாக இருக்கும் நேரத்தில் லோகாண்டா  என்ற தளத்தில் ஆபாச விளம்பரங்களை பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்த விளம்பரங்களை பார்த்து, அதில் கொடுக்கப்பட்ட செல்போன் எண்களுக்கு தொடர்பு கொள்வதையும் செய்து வந்துள்ளார்.

இவ்வாறு பெண் என நினைத்து ஒரு நம்பருக்கு தொடர்பு கொள்கையில், செல்போனில் பேசிய ஆசாமி வங்கி அதிகாரியின் குடும்ப விபரத்தை தெரிந்துகொண்டு, சில ஆபாச புகைப்படங்களை அவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

பின்னர், வங்கி அதிகாரியாக பணியாற்றி வரும் உனது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆபாச புகைப்படங்கள் உள்ளதாக மிரட்டி, பணம் பறிக்க தொடங்கியுள்ளான்.

இதனால் பதறிப்போன நபரும் செய்வதறியாது கூகுள் பெ வழியாக ரூ.49 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.

காவல்துறையினர் விசாரணைக்கு பின்னர் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியை சேர்ந்த கட்டிட பொறியாளர் பிரசாந்த் (வயது 27), அவருக்கு உதவியாக இருந்த அஜித் குமார் என்ற (வயது 49) கொத்தனார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

இவர்கள் இதனை போல பலரிடமும் பணம் பறித்து வந்தது தெரியவந்துள்ள நிலையில், ரூபாய் 3 இலட்சம் ரொக்கம் மற்றும் இருசக்கர வாகனம், பாஸ்போர்ட், 4 செல்போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.