திமுக ஆட்சி பஞ்சராகி விடும் - பொள்ளாச்சி ஜெயராமன் சபதம்

admk dmk mkstalin spvelumani pollachijayaraman
By Petchi Avudaiappan Dec 07, 2021 11:07 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

தமிழ்நாட்டில் பத்து மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

கோவை ஒசூர் சாலையில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்று செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொணடனர்.

நிகழ்ச்சியில் பேசிய எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன் பேசும் போது, திமுக ஆட்சி பத்து அமாவாசைக்குள் பஞ்சராகி விடும். பல கட்சிகள் தலைவர்களால் உருவாக்கப்பட்டது. இது மக்களால் தொடங்கப்பட்ட கட்சி. பல பொய்களை கூறி ஆட்சியை பிடித்தது திமுக. சொன்னதை செய்யாத திமுகவை கண்டித்து நாளை மறுதினம் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அதிமுககாரன் அடி வாங்குவதில் விண்ணை தொட்டு நிப்பான். அடிப்பதில் ஆகாயத்தை தாண்டி அடிப்பான். 6 மாத காலம் பொறுமையாக இருந்த காரணத்தினால் நாங்கள் என்ன பிஸ்கோத்து பார்ட்டிகளா? நாங்கள் சிலிர்த்து எழுந்தால் அதிமுக எதிரிகள் தாங்கமாட்டார்கள்.

அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் வாழ்ந்ததாகவும், வளர்ந்ததாகவும் வரலாறு இல்லை. இந்த இயக்கத்தை காட்டி கொடுத்தவர்கள் எல்லாம் எங்கே இருக்கிறான் என தெரியாத சூழ்நிலை தான் இருக்கிறது. அதிமுக எதற்கும் அஞ்சாது. அச்சப்படாது. எதிரிகளை பத்து அமாவாசைக்குள் வீழ்த்திக் காட்டுவோம். 10 அமாவசைக்குள் அதிமுக அரியணை ஏறும் என கூறினார்.