பொள்ளாச்சி கொடூர சம்பவம் தான் சூர்யா - 40 கதையா?
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தில் பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் சூர்யா 40. கொரோனா வைரஸ் பிரச்சனையால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் மீண்டும் படப்பிடிப்புகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
ஆகவே ஜூலை 1ம் தேதி மீண்டும் படப்பிடிப்பை துவங்கி, ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அனைத்து காட்சிகளையும் படமாக்க திட்டமிட்டுள்ளார்களாம்.
இந்நிலையில் படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக வைத்து சூர்யா 40 எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
படத்தில் பொள்ளாச்சியில் நடந்த சில சம்பவங்களை இயக்குநர்பாண்டிராஜ் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனாலும் இதனை படக்குழுவினர் இதுவரை உறுதி செய்யவில்லை.