சங்கிகள் கவனத்திற்கு; இங்கு கூடுதல் விலைக்கு மதுவகை விற்கப்படுவதில்லை - போஸ்டரால் பரபரப்பு!
அண்ணாமலையின் சாட்டை அடி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாஸ்மாக் விவகாரம்
அரசு சார்பாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை மது குப்பிகளின் மீது அச்சடித்து நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைக்கு மேல் அதிக பணம் வசூல் செய்யப்படுவதாக பாஜகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பொள்ளாச்சியில் திமுக சார்பில் பேருந்து நிலையத்திற்கு பின்புறம், ராஜா மெயின் ரோடு, உள்ளிட்ட பகுதிகளில் திமுகவினர் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர்.
போஸ்டரால் பரபரப்பு
அதில், சங்கிகளின் கவனத்திற்கு என குறிப்பிட்டு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொல்லும் புகைப்படத்தை அச்சிட்டு, அதற்கு கீழே
இக்கடையில் தமிழக அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலைக்கு மது வகைகள் விற்கப்படுவதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இது அங்குள்ள அரசு டாஸ்மாக் கடைகள் வாசலில் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.