மர்மமான முறையில் பெண் யானை உயிரிழப்பு - என்ன நடந்தது?
pollachi
elephant death
By Anupriyamkumaresan
பொள்ளாச்சி அருகே மர்மமான முறையில் பெண் யானை ஒன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட உருலகுளிபள்ளம் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அடர்ந்த வனப்பகுதிக்குள் 46 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உயிரிழந்த அந்த யானையை மருத்துவக்குழுவினர் அதே இடத்திலேயே வைத்து பிரேத பரிசோதனை செய்தனர்.