‘’ இந்த வழக்குல கொடுக்குற தண்டனை இந்தியாவுக்கே உதாரணமா இருக்கும் ’’ - பேரவையில் முதலமைச்சர் அதிரடி பேச்சு

dmk mkstalin CMMKStalin
By Irumporai Mar 23, 2022 07:30 AM GMT
Report

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை நினைவுபடுத்துவது போல விருதுநகரிலும் நடந்த  கூட்டு பாலியல் சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் 

விருது நகரில் நடந்த இந்த பாலியல் வழக்கினை சிபிசிஐடி-க்கு மாற்றுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். மேலும் இந்த வழக்கினை பொள்ளாச்சி பாலியல் வழக்கினை அதிமுக கையாண்டது போல் அல்லாமல் இந்த வழக்கில் சம்மந்தபட்ட குற்றவாளிகளுக்கு எப்படி தண்டனை பெற்று தரப்போகிறோம் என்பதை அனைவரும் பொறுத்திருந்து பாருங்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு  60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு,இந்த வழக்கு தனி நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.விரைந்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரப்படும் என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பாலியல் வழக்கை மாநில வழக்காக எடுத்து நேரடியாக கண்காணிக்குமாறு தமிழக காவல்துறை டிஜிபி அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.நிச்சயம் பொள்ளாச்சி பாலியல் வழக்கு போன்று இல்லாமல்,வண்ணாரப்பேட்டை 13 வயது சிறுமி பாலியல் வழக்கு போல் இல்லாமல் இந்த வழக்கு நிச்சயம் முறைப்படுத்தப்படும். ஒட்டுமொத்த இந்தியாவிற்கே உ இந்த வழக்கு விரைந்து தண்டனை கொடுக்கும் முன்னணி வழக்காக இருக்கும்.

இதுபோன்று தவறு செய்பவர்களுக்கு இந்த வழக்கு பாடமாக இருக்கும்.பொறுத்திருந்து பாருங்கள்,சட்டப்பேரவையில் உள்ள அனைவருக்கும் இதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்”,என்று உறுதியளித்துள்ளார்.