கள்ளக்காதலுக்கு இடையூறு- பெற்ற குழந்தையை கொடூரமாக கொலை செய்த அரக்கி
பொள்ளாச்சி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 3 வயது பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய் மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த தம்மம்பதி மலைக்கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இவர், இவரது மனைவி சரோஜினி மற்றும் 3 வயது மகள் நிவன்யாஸ்ரீயோடு வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 14ம் தேதி மணிகண்டன் வேலைக்கு சென்ற நிலையில், குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை என கூறி சரோஜினி குழந்தையை அழைத்துகொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், குழந்தையின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதால் மருத்துவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தாயார் சரோஜினியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் சரோஜினிக்கு மலைவாழ் குடியிருப்பை சேர்ந்த பொம்மன் என்பவருடம் கள்ளத்தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்களது இந்த உறவுக்கு இடையூறாக இருப்பதால் குழந்தையை கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
இதனை தொடர்ந்து தாயார் சரோஜினி மற்றும் கள்ளக்காதலர் பொம்மனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.