இன்று அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள புறப்படுகிறார் சசிகலா - அதிமுக நிர்வாகிகளிடையே சலசலப்பு - ஈபிஎஸ் - ஓபிஎஸ் கலக்கம்
கடந்த சட்டமன்ற தேர்தலில் அரசியலிலிருந்து ஒதுங்கி கொள்வதாக அறிவித்த சசிகலா அதிமுக தோல்வியையடுத்து மீண்டும் அதிமுகவை கைப்பற்றும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
அதிமுக பொன்விழாவையொட்டி எம்.ஜிஆர் நினைவில்லத்திலும், அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் அதிமுக கொடியை ஏற்றி வைத்ததுடன், எம்ஜிஆர் இல்லத்தில் பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இந்நிலையில், சசிகலா இன்று அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்திலிருந்து அதிமுக கொடி கட்டிய காரில் இன்று காலை புறப்படுகிறார். அவருடன் பரப்புரை வாகனமும் செல்ல உள்ளது. ஒருவார கால அரசியல் சுற்றுப்பயணத்தை சசிகலா இன்று தொடங்க இருக்க உள்ளார். இந்நிலையில், வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் திரண்டிருக்கிறார்கள்.
இந்த சுற்றுப்பயணத்தில் அதிருப்தியில் உள்ள அதிமுக நிர்வாகிகளை நேரில் சந்திக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. சசிகலா தென்மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது. சசிகலாவின் அரசியல் சுற்றுப்பயணம் அதிமுக நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
