உன் மிரட்டலுக்கு நான் அஞ்சப்போவதில்லை - காயத்ரி ரகுராம்
கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் வேல்முருகன் பேசிய ஒரு வீடியோவை, தற்போது காயத்ரி ரகுராம் வெளியிட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
காயத்ரி ரகுராமையும், குஷ்புவையும் கடுமையாக தாக்கி பேசும் வேல்முருகன் வீடியோ ஒன்றை வெளியிட்ட காயத்ரி ரகுராம், தன் பதிவில் ‘உன்னை மிரட்டாமல் ஏன் இவ்வளவு பயம்? ஒரு பெண்ணுக்கு ஏன் அருவாள் சுமக்க வேண்டும்? என்றும், திருமாவும், வேல்முருகனும் அவர்கள் எங்கும் காணப்படவில்லை என்றால் விளம்பரம் இல்லை என்றால் காயத்திரி ரகுராம் மாமியைத் தூண்டுவார்கள். அதனால் அவர்கள் மாமிகளை மட்டும் தாக்குகிறார்கள்.. இது அவர்களின் ஆண்மை. உங்கள் தொகுதியில் ஏதாவது வேலை செய்யுங்கள்.. வெள்ளத்தில் மக்களுக்கு உதவுங்கள், நல்ல சேவை செய்யுங்கள். நான் உன்னை கண்டு பயப்படவில்லை..’என்று பதிவிட்டுள்ளார்.
தற்போது, இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
உன்னை மிரட்டாமல் ஏன் இவ்வளவு பயம்? ஒரு பெண்ணுக்கு ஏன் அருவாள் சுமக்க வேண்டும்? #Im_Waiting https://t.co/PfDMSPpLrz
— Gayathri Raguramm ??? (@BJP_Gayathri_R) November 13, 2021