ஆடியோவால் சிக்கிய அண்ணாமலைக்கு நடிகை காயத்ரி ரகுராம் ஆதரவு டுவிட்

politics-samugam
By Nandhini Aug 27, 2021 03:59 AM GMT
Report

தமிழக பாஜகவில் பாலியல் அத்துமீறல்கள் அதிகம் நிகழ்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், அக்கட்சியில் 30 ஆண்டுகளாக இருந்து வந்த மூத்த நிர்வாகியின் ஆபாச வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாஜகவின் பொதுச் செயலாளராக இருந்த கே.டி.ராகவனின் அந்த வீடியோவை வெளியிட்டது மதன் ரவிச்சந்திரன். இவர் தமிழக பாஜக பிரமுகர். அந்த வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடம் கொடுத்து நடவடிக்கை எடுங்கள். பெண்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்று கேட்டதாகவும், அதற்கு அண்ணாமலை, எனக்கும் பெண் குழந்தை இருக்கிறது .

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதனால் இந்த வீடியோவை வெளியிட்டு விடுங்கள். அப்படியாவது ஒரு நியாயம் கிடைக்கிறதா என்று பார்ப்போம் என்று சொன்னதாகவும், அதன் அடிப்படையில்தான் தான் அந்த வீடியோவை வெளியிட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்த வீடியோ வெளியானதால், கே.டி. ராகவன் தானாகவே முன்வந்து தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் கட்சியைவிட்டு நீக்கப்பட்டுள்ளார்.

மதன் ரவிச்சந்திரன் கூறுவது பொய் என்று அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார். பாஜகவில் பெண்கள் பாதுகாப்புடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு பாலியல் குற்றச்சாட்டுகள் இல்லை என்று கூறியுள்ளார்

அண்ணாமலை. ஆனால் தன்னிடம் நேரில் பாஜகவில் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகம் உள்ளன. கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை ஒப்புக் கொண்டதை ஆடியோ ஒன்றை வெளியிட்டார் மதன் ரவிச்சந்திரன்.

இந்நிலையில், அண்ணாமலையின் ஆடியோ வெளியாகியுள்ளதால், இதனால் அவரின் பதவிக்கு பங்கம் வந்துவிடுமோ என்று பேசப்பட்டு வரும் நிலையில், நடிகை மற்றும் தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவருமான காயத்ரி ரகுராம் டுவிட்டர் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ பதிவில், ‘எங்களோட பாஜக தலைவர் அண்ணாமலை ஜி இதுவரைக்கும் எல்லா பெண்களுக்கும் மரியாதை கொடுத்து பாதுகாப்பு கொடுத்து தான் சொந்த சகோதரி மாதிரியாகத்தான் பார்த்து இருக்கிறாரே தவிர மற்றபடி அவரைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது. அவர் எல்லா பெண்களையும் அக்கா, தங்கை சிஸ்டர் என்று சொல்லித்தான் அழைப்பார். என்னை அவர் சொந்த சகோதரியாகவே நினைத்தார். அவரைப்பற்றிய ஒரு ஆடியோ வந்தது. அதில் அவரை சிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே செய்யும் சூழ்ச்சிகள் தெரிகிறது. அவர் எப்போதும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில்தான் கவனமாக இருப்பார் மரியாதை கொடுப்பார். என்னுடைய ஆதரவு அண்ணாமலை ‘ஜி’க்கு கண்டிப்பாக இருக்கும்’என்று பதிவிட்டுள்ளார்.