ஜோசப் விஜய் எனும் நான்... - 2031ல் முதல்வராகும் விஜய் .. பரபரப்பான போஸ்டர்கள்!
நடந்து முடிந்த 2021 உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக சுயேச்சையாக போட்டியிட்டதில், 169 இடங்களில் போட்டியிட்டு இதில் 115 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
விஜய் மக்கள் இயக்கத்திற்கு கிடைத்த இந்த வெற்றியை தமிழக அரசியலில் பலரும் பாராட்டி வரும் நிலையில் விஜய் ரசிகர்களும் இந்த வெற்றியினால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் 2031ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சர் ஆனது போல் பரபரப்பு போஸ்டர் அடித்து மதுரை முழுவதும் ஒட்டி இருக்கிறார்கள் .
விஜய், ஆளுநர் முன்பாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வது போல், ஜோசப் விஜய் எனும் நான் உண்மையான நம்பிக்கையும் மாறா பற்றும் கொண்டு இருப்பேன் என உறுதி கூறுகிறேன் என்ற வாசகங்களை அச்சிட்டடுள்ளனர்.

மேலும், 2021இல் உள்ளாட்சியில் நல்ல தேர்வு நீங்கள் தான் தமிழகத்தின் இறுதித்தேர்வு என்ற வாசகங்களை அச்சிட்டு மதுரை முழுவதும் பரபரப்பு போஸ்டரை ஒட்டி இருக்கிறார்கள்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது மு. க. ஸ்டாலின் பதவிப் பிரமாணத்தின் போது, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று சொல்லியது போல ஜோசப் விஜய் எனும் நான் என்று விஜய் ரசிகர்கள் விஜய்க்கு போஸ்டர் அடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது