ராகுல், பிரியங்கா காந்திக்கு அனுமதி - உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தை சந்திக்க புறப்பட்ட காங். தலைவர்கள்
உத்தரபிரதேசம் – லக்கிம்பூர் செல்வதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
லக்கிம்பூர் பகுதியில் அரசு விழாவில் பங்கேற்கச் சென்ற மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா சென்றார். அப்போது, அவரது காரை வழிமறித்து அப்பகுதியில் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
இதனால், ஆத்திரமடைந்த ஆஷிஸ் மிஸ்ரா, கார் மோதியதில் 4 விவசாயிகள் பரிதாபமாக இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, வெடித்த வன்முறையில், பத்திரிகையாளர் உட்பட மேலும் 5 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம், லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்திருக்கிறது.
இந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து லக்கிம்பூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே, உயிரிழந்த விவசாயிகளை சந்திக்க தடையை மீறி சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை உத்தரபிரதேச போலீசார் கைது செய்து தடுப்பு காவலில் வைத்தார்கள். பிரியங்கா காந்தியின் கைதுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், லக்கிம்பூர் செல்ல காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு உத்தரபிரதேச அரசு அனுமதி அளித்திருக்கிறது. மேலும், அவர்களுடன் 3 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி விமானம் மூலம் உத்தரபிரதேசம் செல்ல இருக்கிறார். அவருடன் பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் முதலமைச்சர்களும் செல்ல உள்ளனர்.