ஏம்பா... ‘குறைஞ்ச விலைக்கு பெட்ரோல் வேணும்னா ஆப்கானிஸ்தானுக்கு போங்க...’ - பாஜக நிர்வாகி திமிர் பேச்சு

politics-india-samugam
By Nandhini Aug 20, 2021 02:14 PM GMT
Report

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான ராம் ரத்தன். நாட்டில் தற்போது பெட்ரோல் விலை உயர்வு மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இதனால் பாஜக தலைவர்களிடம் இதுதொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. அதற்கு அவர்களும் வித்தியாச வித்தியாச முறையில் விளக்கம் கொடுத்து வருகிறார்கள். அவர்கள் கொடுக்கும் வித்தியாசமான விளக்கம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ராம் ரத்தன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, அப்போது செய்தியாளர்கள் பெட்ரோல்- டீசல் விலை குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதில் அளித்து பேசியதாவது -

இந்தியாவில் கொரோனாவால் பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. 3-வது அலை தாக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

மீண்டும் கடினமான காலத்தை எதிர்கொள்ள உள்ளது. ஆனால், பலர் பெட்ரோல் விலை குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். பெட்ரோல், டீசல் குறைவான விலையில் தேவைப்பட்டால் ஆப்கானிஸ்தான் செல்லுங்கள்.

அங்கு 1 லிட்டர் பெட்ரோல் 50 ரூபாய்க்குக் கிடைக்கிறது என முகத்தில் அடித்தது போல் கூறியுள்ளார். இவரது பேச்சு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இவருக்கு பலர் தங்களது கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.