மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் ராகுல் : முகநூல் நிறுவனம் நோட்டீஸ்!
டெல்லியில் தலித் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், அந்த சிறுமியின் பெற்றோரின் புகைப்படத்தை தன், 'இன்ஸ்டாகிராம்' சமூக ஊடகத்தில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்
ராகுல். அவர் இந்த பதிவை போடுவதற்கு முன்னார், அவரது ஆலோசகர்களாவது இந்த பிரச்சினையை எடுத்து சொல்லியிருக்கலாம் மற்ற கட்சியினர் முணுமுணுத்துள்ளனர்.
'பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சிறுமியின் குடும்பத்தினரை வெளி உலகிற்கு அடையாளம் காட்டுவது, 'போக்சோ' சட்ட விதி மீறல்' என்று கூறி, என்.சி.பி.சி.ஆர். எனப்படும், குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையம், இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான பேஸ்புக்கில் புகார் கொடுத்துள்ளது.
இதனையடுத்து, அந்த வீடியோ பதிவை உடனடியாக நீக்குமாறு பேஸ்புக் நிறுவனம் ராகுலுக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
