தடுப்புக்காவலில் பிரியங்கா காந்தி - விளக்குமாரால் இடத்தை சுத்தம் செய்யும் வீடியோவால் பரபரப்பு!

politics-india-priyanka-gandhi
By Nandhini Oct 04, 2021 10:46 AM GMT
Report

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அறையை காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி சுத்தம் செய்வது போன்ற காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதிக்கு இறந்துபோன விவசாயிகள் குடும்பங்களை சேர்ந்த நபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற, காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்க காந்தி செல்ல முற்பட்டார். அப்போது, உத்தரபிரதேச காவல்துறையினரால் அவர் தடுத்து நிறுத்தி, போலீசார் அவரை கைது செய்தனர். தற்போது அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவர் தங்கியிருக்கக் கூடிய அறையை விளக்குமாரால் சுத்தம் செய்து இருக்கிறார். மேலும், அவர் உண்ணாவிரதம் இருந்து வருவதாகவும் உத்தரபிரதேச காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியினர் கூறியுள்ளனர். இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் சமூகவலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

அதே போல உ.பி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். முன்னதாக உத்தரபிரதேச காவல்துறையிடம் என்னை ஏன் தடுக்கிறீர்கள்.. நான் அவர்களை சந்திக்க கூடாதா? என்று காரசாரமாக விவாதித்த நிலையில், அந்த வீடியோ தற்போது டுவிட்டரில் வெளியானது. இந்நிலையில் 2வது வீடியோ காட்சி தற்போது வெளியாகி இருக்கிறது.

இதனையடுத்து, அவரை தடுப்புக்காவலில் சட்டவிரோதமாக வைத்திருப்பதாகவும், நீதிமன்றத்தில் இது சம்பந்தமாக நாங்கள் முறையிடப் போவதாகவும் பிரியங்கா காந்தியின் வழக்கறிஞர் கூறியுள்ளார். தற்போது அவரும் தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.